fbpx

“கத்திரிக்கோலால் சதக்”.! செல்போன் தராத கணவருக்கு நேர்ந்த கொடூரம்.! மனைவி கைது.!

உத்திரபிரதேச மாநிலத்தில் செல்போன் தராத கணவனை மனைவி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருக்கும் காவல்துறையினர் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் அங்கீத். இவரது மனைவி பிரியங்கா. யூடியூபில் பாடல்களைப் பார்ப்பதற்காக செல்போனை தருமாறு கணவனிடம் பிரியங்கா கேட்டிருக்கிறார். இதற்கு அவரது கணவர் அங்கீத் மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பிரியங்கா அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது கணவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த அங்கீத் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து மனைவியிடமிருந்து அவரை காப்பாற்றி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கீத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவரது மனைவி பிரியங்கா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் தராததால் கணவன் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

"இரக்கமற்ற சம்பவம்..." 12 வயது புற்றுநோயாளி மகனை கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர தந்தை .!

Fri Dec 29 , 2023
மகனுக்கு கேன்சர் வந்ததால் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சாதாரா மாவட்டம், ஹிவார்னே கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் கட்டல். இவருக்கு 12 வயதில் மகன் இருந்தான். இந்நிலையில் சில நாட்கள் உடல் நலம் பாதிப்பால் மகன் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவனை […]

You May Like