fbpx

“உன் தங்கச்சிய தீ வச்சு கொன்னுட்டோம்” அண்ணனுக்கு வந்த செல்போன் அழைப்பு.! கொடூர செயல்.!

தனது தம்பி தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது மனைவி நீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி நிர்மலா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் பிரகாஷின் அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நிர்மலாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நிர்மலாவின் சகோதரருக்கு போன் செய்து தங்கையை எரித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் கடலமாக கிடந்த நிர்மலாவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக நிர்மலா கணவரின் அண்ணன் சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.

அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது தம்பி பிரகாஷின் தற்கொலைக்கு நிர்மலா தான் காரணம் என தெரிவித்திருக்கிறார். இதனால் அவர் மீது தீராத பகையிலிருந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது தீ வைத்து எரித்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Post

இன்ஸ்டாகிராமில் 14 வயது சிறுமியின் ஆபாச படம்.! முன்னாள் காதலனை கைது செய்த காவல்துறை.!

Sun Dec 24 , 2023
கோவாவைச் சார்ந்த இளைஞர் தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கோவா மாநிலம் மார்கோவை சேர்ந்த சமீர் ஹசாரா என்ற இளைஞர் 14 வயது சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது காதலியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் […]

You May Like