fbpx

சபாநாயகருடன் நேற்று மோதல்.. இன்று த.வா.க MLA வேல்முருகன் ஆப்சென்ட்..!!

பேரவையில் நேற்று சபா நாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபுவுடன் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் ஆப்சென்ட் ஆகியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது 4வது நாள் விவாதம் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து பிரச்சனைகளை எதிகட்சிகள் கேள்வி எழுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை விதிகளை மீறி பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் நடந்து கொள்கிறார். தனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி சபா நாயகர் இருக்கைக்கு வந்து மிரட்டுவதாக சபாநாயகர் அப்பாவு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேல் முருகன் ஒருமையில் பேசுவதையும், அமைச்சர்களை கை நீட்டி பேசுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் கூறுகையில், எம்.எல்.ஏ வேல் முருகன் பேச்சு இன்று அதிக பிரசங்கிதனமாக உள்ளது. விதிகளை மீறி சபாநாயகர் இருக்கை அருகே வரக்கூடாது எனக்கூறியும் வேல்முருகன் கேட்கவில்லை.. தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் வகையில் வேல் முருகன் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து வேல் முருகனை மன்னிப்பதாக அப்பாவு தெரிவித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

பேரவையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு என்னை ஒருமையில் பேசுகிறார். உனக்கு என்ன தெரியும் என நக்கலாக பேசுகிறார். அவர் அதிமுகவில் இருந்து வந்தவர். தற்போதும் அதிமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக பேசி வருகிறார். திமுக அமைச்சரவையில் இருந்து கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார். நேற்று சபா நாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபுவுடன் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் 5 வது நாள் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

Read more: தாஜ்மஹாலைக் கட்டிய பிறகு, ஷாஜகான் தொழிலாளர்களின் கைகளை வெட்டினாரா..? உண்மையில் என்ன நடந்தது? வரலாறு ஒரு பார்வை..

English Summary

Yesterday’s clash with the Speaker.. MLA Velmurugan absent today..!!

Next Post

விறுவிறுப்பாக நடைபெறும் ஜனநாயகன் ஷூட்டிங்.. 25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியல் களம்..!! தவெக தலைவர் விஜய் அப்டேட்..

Fri Mar 21 , 2025
Janyayan shooting is going on in full swing.. Vijay enters the political arena after 25 days..!

You May Like