fbpx

சோள காட்டில் வீசப்பட்ட இளம் பெண் உடல்.! கூட்டு பலாத்காரம் செய்து வெட்டிக்கொலை.!

சமீப காலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மட்லா மாவட்டத்தில் மோட்டாபரி என்ற கிராமத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் சடலம் சோளக்காட்டில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் அவரை கொலை செய்து விட்டு அந்த உடலை சோள வயலில் வீசி சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இறந்த இளம் பெண் யார் என்பது தொடர்பாகவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Next Post

டெல்லி போராட்டத்தில் பலியான விவசாயி.! கண்ணீர் புகை தாக்குதலால் மரணம் அடைந்தாரா.?… வெளியான அதிர்ச்சி தகவல்.!

Fri Feb 16 , 2024
கடந்த 2020 ஆம் வருடம் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது விலை பொருட்களுக்கு ஆதார விலை கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தவிர விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதா ரத்து போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

You May Like