fbpx

காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறு விரக்தியில் இளம் பெண் எடுத்த முடிவு…..! இறுதியில் ஏற்பட்ட விபரீதம்….!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணார ஊராட்சி பச்சைமலை தேனூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அறிவுரை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் 4 வருடம் சென்ற பின்னரும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை ஆகவே அடிக்கடி இவர்களுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆகவே லாரி ஓட்டுனரான அழகேசன் நேற்று வழக்கம்போல வேலைக்கு செல்வதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார் ஆனால் சந்தியாவோ லாரி ஓட்டுனர் வேலைக்கு செல்ல வேண்டாம், வயல் வேலைக்கு செல்லுங்கள் என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் வயல் வேலைக்கு செல்ல மறுத்த அழகேசனுக்கும், சந்தியாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மனம் உடைந்து போன சந்தியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சந்தியாவின் ஆதாரங்கள் சட்டத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை வைத்து துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். தொடர்பாக துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சந்தியாவிற்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால், அவரது மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமா என்று முசிறி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Post

பாட புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம்…..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…..!

Thu Jun 8 , 2023
Probability இன்று சொல்லப்படும் நிகழும் தகவை கையாள்வதற்காக தமிழக அரசின் பாட புத்தகங்களில் பகடை மற்றும் சீட்டுக்கட்டு கணக்குகள் இடம் பெற்றுள்ளனர். அதில் சீட்டுக்கட்டு கணக்குகள் மாணவர்கள் இடையே தவறான எண்ணத்தை உண்டாக்குவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் இருந்தும் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு பாடத்தில் சீட்டு கட்டு குறித்த 5 […]

You May Like