கோவை மாவட்ட பகுதியில் டாடாபாத்தில் மேகலபிரியா என்பவர் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் உதவி லேப் டெக்னீசயனாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் கோவை பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வாடகைக்கு தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் கதவு திறக்கவே இல்லை. மேலும் பதட்டத்துடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மேகலபிரியா தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மேகலபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மேகலபிரியா தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலையா என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.