fbpx

“ஒழுங்கா லவ் பண்ணு இல்லேன்னா கொன்னுடுவேன்” நடு ரோட்டில், இளம்பென்னிற்கு நேர்ந்த கொடூரம்!!

திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு பகுதியை சேர்ந்தவர் 23 வயதான மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மதுரவாயல் அருகே உள்ள நும்பல் என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதே மாங்காடு பகுதியில் உள்ள கோவூர் நகரை சேர்ந்த 29 வயதான ஈனோக் என்பவருக்கு மீனா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீனாவை காதலிப்பதாக கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ஈனோக் மீது மீனாவிற்கு விருப்பம் இல்லை. இதனால் அவர் ஈனோக்கின் காதலை புறக்கணித்து வந்துள்ளார். ஆனால் ஈனோக் தொடர்ந்து மீனாவை வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல மீனா தனது வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற ஈனோக், தன்னை காதலிக்குமாறு மீனாவை வற்புறுத்தியுள்ளார். அதற்கு மீனா மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த ஈனோக், மீனாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஈனோக்கை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஈனோக் மீது, ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: திருப்பதியை உலுக்கிய கோரம்.. சந்திரபாபு நாயுடு போட்ட அதிரடி உத்தரவு.. அதிகாரிகளுக்கு பறந்த சஸ்பெண்ட் ஆர்டர்..!!

English Summary

young woman who refused to love was beaten up brutally

Next Post

"எனக்கு அது சுத்தமா பிடிக்காது, ஆனா எங்க அம்மா தான்..." வைரலாகும் நித்யா மேனனின் பேட்டி...

Fri Jan 10 , 2025
interview of nithya menon gets viral

You May Like