நிர்வாணமாக ஒரு பெண் தெருக்களில் சுற்றி தெரியும் சிசிடிவி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது .
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் முக அடையாளம் தெரியாத நிலையில் நிர்வாணமாக அந்த ஊர் முழுவதும் சுற்றி திரிந்திருக்கிறார். இது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இதனை யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி நிறுவனமாக சுற்றித்திரிந்துள்ள பெண் ஒருவரின் வீட்டு கதவை தட்டி இருக்கிறார். சிசி டிவியில் பதிந்த காட்சிகளை whatsapp மூலமாகவும் சமூக வலைதளங்களின் மூலமாகவும் பொதுமக்கள் பரப்பிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி உத்திரபிரதேச காவல்துறையினர் இந்த வீடியோ தொடர்பாக விசாரணையை ஆரம்பித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உள்ளூர் வாசிகள் அந்தப் பெண்ணிற்கு 25 வயது இருக்கும் எனவும் அவர் ஒரு வீட்டின் கதவை தட்டியதை தொடர்ந்து இரண்டு நபர்கள், பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகவும் தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை கண்ட அந்த ஊர் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். யார் அந்த பெண்? எதற்காக இவ்வாறு சுற்றித்திரிகிறார்? அந்தப் பெண்ணிற்கு என்ன ஆகி இருக்கும்? இல்லை இது ஏதேனும் சடங்கா? அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.