fbpx

சினிமா ஸ்டைலில் தங்கம் கடத்த முயன்ற இளைஞர்! சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை முயன்ற இளைஞரை  விமான நிலைய போலீசார்  கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து  ரூபாய் 56.94 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க  துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை எடுத்து  விமான நிலையத்தில் சோதனையை பலப்படுத்தினர் அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் தீவிரமான சோதனைக்கு பின்னரே விமான நிலையத்தில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் துபாயில்  இருந்து வந்த ஒரு பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது  முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறி இருக்கிறார் அந்த நபர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த நபரை தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர் கொண்டு வந்திருந்த பொருட்கள் கைப்பை தொலைபேசி லேப்டாப் என அனைத்து சாதனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனர் சுங்கத்துறை அதிகாரிகள். அந்த நபரிடம் தீவிரமாக சோதனை நடத்திய அதிகாரிகள்  அவர் தங்கம் கடத்தி வந்திருப்பதை உறுதி செய்தனர்.  மேலும் சம்பந்தப்பட்ட அந்த நபர்  தனது உள்ளாடைகளுக்குள் மறைத்து  தங்கத்தை கடத்தி வந்திருப்பது சுங்க அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது . இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ 110 கிராம் மதிப்பிலான  தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள். இதனுடைய இன்றைய மதிப்பு 56.94  லட்ச ரூபாயாகும். இதனைத் தொடர்ந்து அந்த நபரின் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை  இந்தியாவிற்குள் கடத்தி வருவது  தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கான உபகரணங்களை இந்திய சுங்கத்துறைக்கு வரி செலுத்தி நம்மால் எடுத்து வர இயலும். ஆனாலும் இது போன்ற நபர்கள் அரசாங்கத்தையும் சுங்கத்துறையையும் ஏமாற்றி கிலோ கணக்கில் தங்கங்களை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி கடத்தி வரலாம் என நினைத்து மாட்டிக் கொள்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு  நான்கு நபர்களிடமிருந்து 25 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  ஒரு நபரை ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்திருப்பது  சுங்கத்துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Baskar

Next Post

’மக்களே அபராதம் செலுத்த தயாரா’..? அப்படினா இனியாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..!!

Tue Feb 7 , 2023
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சிக் கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டப்படி, நகரின் பொது இடங்களில் […]

You May Like