fbpx

கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை! கட்டாய கல்யாணத்தால் நேர்ந்த விபரீதம்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால்அவளை திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். இதனால், அந்த பெண்ணின் உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு அழைத்தனர். பின்னர், காவல் நிலைய வாசலில் உள்ள கோவிலில் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் , இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அந்த பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி, தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறி உள்ளார். சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

மனைவி கழுத்தை அறுத்து கொலை! மதுபோதை கணவரால் சீரழிந்த குடும்பம்..!!

Thu Apr 4 , 2024
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். தனது சொந்த அத்தை மகளான பாரதி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், மதுப்பழக்கம் கொண்ட மகேந்திரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி பாரதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  அண்மையில் மகேந்திரன் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் […]

You May Like