#வேலூர்: கள்ளக்காதலியை சரமாரியாக வெட்டிய கொடூரம்..!

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிளித்தான் பட்டறையில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ராஜேஷ் (28) என்பவர். இவர் தனது மனைவி திலகாவுடன் (28) வசித்து வருகிறார். 


ராஜேஷின் நண்பரான சந்தோஷ் (28). அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்த நிலையில் முறையில் சந்தோஷுக்கும் திலகாவுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் இருவருக்குமிடையில் காதலாக மாறிய நிலையில், கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினத்தில் கள்ளக்காதல் ஜோடி காந்திநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் கள்ளக்காதலியான திலகாவை காது, தலை என பல பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். 

படுகாயமடைந்த திலகா கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திலகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து சந்தோஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

பிரிந்து வாழும் மனைவிக்கு இ-மெயிலில் கணவர் செய்த காரியம்..!

Mon Dec 12 , 2022
கேரளா மாநில பகுதியில் உள்ள கொடுங்கையூர் எருக்கஞ்சேரியில் கலா (32), என்பவர் கடந்த 2019ம் ஆண்டு  பாலு (35) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர்களிடையே சில நாட்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சென்ற செப்டம்பர் மாதம் 23ம் தேதி கலாவின் இ-மெயில் க்கு ஒரு மெயில் வந்துள்ளது. அந்த பதிவில் கலா மற்றும் அவரது அப்பா பற்றியும் ஆபாச வார்த்தைகளால் […]
gmail

You May Like