திமுக ஆட்சியில் கட்டிய கட்டிடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்…! அண்ணாமலை அதிரடி

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா..? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது அவர் எக்ஸ் தளத்தில்; கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்திருக்கிறது.

விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதில் கூட, திமுக அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா..? விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு கட்டிய கட்டிடங்கள் அனைத்தையுமே, தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது, அனைத்து தரப்பு மக்களுக்குமே நல்லது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Job: 574 கௌரவ விரிவுரையாளர் காலி பணியிடங்கள்..! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

Tue Jul 22 , 2025
நேற்று சென்னை இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள், அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபடவுள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது; FLOLDITGOT தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. […]
tn govt 20251 1

You May Like