பம்பர் வேலைவாய்ப்பு.. LIC-யில் 9394 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி (LIC) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. பல்வேறு மண்டலங்களின் கீழ் உள்ள பல்வேறு பிரிவு அலுவலகங்களின் அதிகார வரம்பில் அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர் (Apprentice Development Officer -ADO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் LIC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான licindia.in ஐப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி இன்றே கடைசிநாளாகும். மொத்தம் 9394 காலி பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன..

1,516 காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? LIC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

கடந்த மாதம் 21-ம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டது.. இன்றுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைய உள்ளது.. விண்ணப்பதாரர்கள் இன்றைக்குள் தங்கள் விண்ணப்ப விவரங்களை திருத்திக் கொள்ளலாம்..

ADO காலியிட விவரங்கள்

  • வடக்கு மண்டல அலுவலகம்: 1216 பணியிடங்கள்
  • வட மத்திய மண்டல அலுவலகம்: 1033 பணியிடங்கள்
  • மத்திய மண்டல அலுவலகம்: 561 பணியிடங்கள்
  • கிழக்கு மண்டல அலுவலகம்: 1049 பணியிடங்கள்
  • தென் மத்திய மண்டல அலுவலகம்: 1408 பணியிடங்கள்
  • தெற்கு மண்டல அலுவலகம்: 1516 பணியிடங்கள்
  • மேற்கு மண்டல அலுவலகம்: 1942 பதவிகள்
  • கிழக்கு மத்திய மண்டல அலுவலகம்: 669 பணியிடங்கள்

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை : விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும்.. இந்த தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.. அதைத் தொடர்ந்து ஆட்சேர்ப்புக்கு முன்பு மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்..

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்கள் https://licindia.in/Bottom-Links/careers என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேறு வழிகள்/விண்ணப்ப முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே விண்ணப்பதாரர்கள் 21.01.2023 முதல் 10.02.2023 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், வேறு எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க நேரடி லிங்க் இதோ : https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice-Development-Officer-22-2

Maha

Next Post

இந்திய நாடாளுமன்றத்தில் 420 என்ற நம்பரில் இருக்கை இல்லை.. அதற்கு பதில் என்ன நம்பர் இருக்கும் தெரியுமா..?

Fri Feb 10 , 2023
இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் லோக் சபா என்ற மக்களவை உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆனால் அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருப்பார்கள்.. ஆளுங்கட்சி எம்.பிக்கள் வலது புறத்திலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடதுபுறத்திலும் அமர்ந்திருப்பார்கள்.. மக்களவையில் அனைத்து எம்.பி.க்களுக்கும் நிலையான இருக்கைகள் உள்ளன.. […]

You May Like