பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வதவித் தொகை […]

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, […]

தங்கள் உணவுப் பழக்கத்தால் உலக சாதனை படைப்பவர்கள் பலர் உள்ளனர். மிக உயரமான கட்டிடம் கட்டுவது அல்லது மிகப்பெரிய ரொட்டி செய்வது, மிகப்பெரிய காய்கறி வளர்ப்பது, மிக நீளமான நதியைக் கடப்பது அல்லது வேகமாக ஓடுவது போன்ற பல வகையான சாதனைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உங்களை ஆச்சரியப்படுத்தும் அதிக ரொட்டிகளை சாப்பிடும் சாதனையைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பீகாரின் கதிஹாரில் வசிக்கும் ஒருவரின் உணவுப் பழக்கத்தைப் […]

அமெரிக்கா தற்போது இந்தியாவின் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது, இது (ஆகஸ்ட் 7, 2025 ) நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க செய்தி சேனலான CNBC-க்கு அளித்த பேட்டியில், மருந்துத் துறை மீது 250% வரி விதிப்பது குறித்து டிரம்ப் எச்சரித்தார். ‘ஆரம்பத்தில் மருந்துகளுக்கு ஒரு சிறிய வரியை விதிப்போம், […]

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என யுஜிசி எச்சரித்துள்ளது. இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்- 2022 யுஜிசி-யால் 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் […]

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய […]

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்மூலமும், தனித் தேர்வர்கள், […]

காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது என்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் 2019 முடிவை அவர் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தானில் ஒவ்வொரு […]

நிர்வாக குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. […]