தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும்.அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் […]

வரி ஏமாற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட முக்கிய நடவடிக்கையின் ஒருப்பகுதியாக வருமான வரித்துறை ரூ.1,045 கோடி அளவிலான போலி வரித் திருப்பிச் செலுத்தல் கோரிக்கைகளை கண்டுபிடித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில், அறிமுகப்படுத்தப்பட்ட AI அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் வருமான வரி கணக்கில் (ITR) உள்ள தகவல்களில் முரண்பாடுகளை கண்டறிந்ததையடுத்து, 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர். வருமான வரி செலுத்துவோரில் சிலர், […]

ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி ஊரகப்பகுதிகளில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைளும் விளக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாக, கட்டிட அனுமதியை 3 வகைகளில் வழங்க வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுயசான்றின் அடிப்படையில் 2,500 […]

தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில், மலைமேல் எழுச்சியுடன் திகழும் முருகன் கோயில்கள், பக்தர்களின் நம்பிக்கையை ஊட்டும் தலமாக விளங்குகிறது. அதுபோல, நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில், சுமார் மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுத்து வரும் ஒரு மலைத் திருத்தலம் கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில். இந்த மலைக்கோயிலில் ‘அண்டி கோலத்தில்’ திகழும் முருகனை காணும் போது, திருவண்ணாமலை பழனி மலையை நேரில் சென்று தரிசித்த உணர்வு எழுகிறது. நுழைவாயிலை கடந்து […]

காமராஜர் பற்றிய அவதூறு தொடர்ந்தால், காங்கிரஸ் பதிலடி தரும் என்று ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அரசு பயணியர் விடுதியிலும் திமுக ஆட்சி காலத்தில் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கலைஞர் […]

நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த […]

டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தை இஸ்ரேல் தாக்குதல் தாக்கியது. டமாஸ்கஸில் உள்ள சிரியாவின் முக்கிய இராணுவத் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் தாக்கப்பட்டதாக இரண்டு சிரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில், “சிறிது நேரத்திற்கு முன்பு, சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவ தலைமையகத்தின் நுழைவாயிலை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது.” […]