முடி உதிர்தலுக்கு அதியச தீர்வாக தைவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 20 நாட்களுக்குள் முடி வளர்ச்சியை மீட்டெடுக்கக்கூடிய புரட்சிகரமான ரப்-ஆன் சீரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர், மேலும் ஆரம்பகால ஆய்வக சோதனைகள் குறிப்பிடத்தக்க முடிவுகளைக் காட்டுகின்றன. எலிகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில், சீரம் கொழுப்பு செல்களை செயல்படுத்துவதன் மூலம் முடி நுண்குழாய்களை மீண்டும் உருவாக்கியது, இதனால் விரைவான மற்றும் புலப்படும் முடி மீண்டும் வளர வழிவகுத்தது. இந்த ஃபார்முலா இயற்கையாகவே பெறப்பட்ட கொழுப்பு […]

கிரிக்கெட் பல வீரர்களின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகத்தான பொழுதுபோக்கை வழங்கியுள்ளது. இருப்பினும், இது கிரிக்கெட் உலகில் குணப்படுத்த முடியாத காயங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் விளையாடும்போது இறந்த சில வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்களில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களும் அடங்குவர். ராமன் லம்பா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராமன் லம்பா 1989 ஆம் ஆண்டு ஒரு கிரிக்கெட் விபத்தில் இறந்தார். லம்பா தனது […]

கறிவேப்பிலை நம் சமையலறைகளில் எளிதாகக் கிடைக்கிறது. வெறும் வயிற்றில் அவற்றை உட்கொண்டால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்திய உணவு வகைகளில் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்னி, கறி அல்லது வேறு எந்த இறைச்சி உணவாக இருந்தாலும், கறிவேப்பிலை இல்லாமல் அவற்றின் சுவை முழுமையடையாது. ஆனால் அவற்றை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் மகத்தான நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா? அதிகாலையில் வெறும் […]

கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) மற்றும் பி.யூ.சி. (PUC) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநில அரசு மாணவர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது, இந்த சதவீதம் 33% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்ச்சி விதிமுறைகள் என்ன..? இந்தக் குறைக்கப்பட்ட சதவீதத்தின்படி, இனி […]

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹோட்டல், இந்தியர்களை குறிவைத்து, பர்ஸ் அல்லது பைகளில் பஃபே உணவை எடுத்துச்செல்ல வேண்டாம் என்ற பழைய அறிவிப்பு ஒன்று தற்போது வைரலாகி உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது. சமீபமாக இந்தியர்கள் பலரும் ஸ்விட்சர்லாந்துக்கு அதிகம் பயணிக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவர பல ஸ்விஸ் உணவகங்கள் பஃபே முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் ஒருவர் குறிப்பிட்ட அளவு தொகை செலுத்திவிட்டு அங்குள்ள உணவு வகைகளில் எதை வேண்டுமானாலும் எவ்வளவு […]

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, இன்று (அக்.28) சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக வதந்தி பரவியதாகவும், பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

மேற்கு துருக்கியில் நேற்றிரவு 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏற்கனவே சேதமடைந்திருந்த குறைந்தது 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்தர்கி (Sindirgi) என்ற நகரத்தில் சுமார் 5.99 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அளித்த தகவலின்படி, சிந்தர்கியில் மக்கள் வசிக்காத 3 கட்டிடங்களும் ஒரு இரண்டு மாடிக் கடையும் […]

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]