தனியார் மருத்துவமனையில் கை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவி சுபஸ்ரீ, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 21-ம் தேதி அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து, முதலில் கட்டு போட்டுக் கொண்ட போதிலும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனது மனைவியின் உடன் பிறந்த சகோதரிகளின் முகங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் நிர்வாண பெண்களின் உடல்களுடன் இணைத்து ஆபாசமாக மாற்றிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கூடலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் (35) என்பவர், நெல்லூர் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் நிலையில், தனது மனைவி மேனகாவுடன் (30) குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் நகரில் வாடகை வீட்டில் வசித்து […]
வங்கிகள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் வாயிலாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு சலுகையை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய முடிவின் காரணமாக, இனி வங்கிகள் மற்றும் முகமைகள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான இறக்குமதிகளுக்கும் 3 சதவீத ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை […]
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழக எல்லைக்கு ஆந்திர அரசு திறந்துவிட வேண்டும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை தமிழகத்திற்கு வெறும் 2.251 டிஎம்சி அடி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. இதனிடையே ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் பாயும் ஆறுகளின் குறுக்கே புதிய அணைகளை கட்ட அம்மாநில அரசு முனைப்பு காட்டி வருவது தமிழக […]
மருத்துவ உலகம் மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பெருகிவரும் போலி விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோயாளிகளின் கருத்துக்களை போலியாக உருவாக்குவதற்கும், வணிக ரீதியான வீடியோ விளம்பரங்களை தயாரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் முழுமையாக தடை விதித்துள்ளது. மேலும், நோயாளிகளின் […]
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் மாணவர் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜந்தர் மந்தரில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் திரண்டு திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் டெல்லி மாநகரம் முழுவதும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் […]
நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க போராடும் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஒடுக்கி வருவதாக தனது எக்ஸ் தள பதிவில் மிக காட்டமாக தெரிவித்துள்ளார். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக முன்னாள் முதல்வர்களான பினராயி விஜயன், அரவிந்த் கேஜரிவால், மமதா பானர்ஜி, மாணிக் சர்க்கார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
நெல்லையில் 17 வயது பள்ளி மாணவிக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து, நகைகளைப் பறித்துச் சென்றதுடன், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டவுன் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அந்த மாணவி, பேட்டை மலையாள மேடு பகுதியில் தனது வகுப்புத் தோழனான காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 பேர் கொண்ட […]
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு எந்திரத்தையும் ஊழல் அதிகாரிகளையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது. “ஏழை எளிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியைச் சுரண்டித்தான் இந்த அதிகாரிகள் வாழ வேண்டுமா? அதற்குப் பதிலாக அவர்கள் பிச்சை எடுக்கலாம்” என்று நீதிபதிகள் தங்களது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர். மேலும், தமிழகத்தின் அனைத்து அரசுத் […]
அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாததால் நார்வே நாட்டை கடுமையாகச் சாடியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எனக்கு எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக தனக்கு எட்டு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று சிராகியூஸ் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றிய ட்ரம்ப், நோபல் பரிசு தேர்வுக்குழுவைக் கடுமையாக விமர்சித்தார். “அமெரிக்காவின் சார்பாக நான்தான் இந்த நோபல் அமைதிக்கான பரிசைப் பெற்றிருக்க வேண்டும், […]

