பீகாரில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை பின்பற்றி 2026 தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் நடத்திய 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நிறைவடைந்தது. டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் வாக்காளர் பட்டியல் மேலாண்மை நிறுவன வளாகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற […]

ஐந்தில் ஒரு சிறுநீர் பாதை நோய்த்தொற்று மாசுபட்ட இறைச்சியால் ஏற்படக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. குறிப்பாக கோழி மற்றும் வான்கோழியில் காணப்படும் ஈ. கோலி பாக்டீரியா, கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்தும். மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) ஏற்படுவது வெறும் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்புடனும் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, […]

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வு, தேசிய தேர்வுகள் […]

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 27-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 […]

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி, அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா […]

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று அரபிக்கடலில் நிலவக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த […]

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் […]

வெனிசுலா பாராமில்லோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து மேலே பறந்த சில நிமிடங்களிலேயே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட பைபர் PA-31T1 என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம் […]