சமூக வலைதளங்களில் ரீல் எடுக்கும் ஆர்வம் உயிரையே பறித்த சோகச் சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்புடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞர், பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் கந்தாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் குமார் பிரதான். பாம்புகளைப் பிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்த இவர், தான் மீட்கும் பாம்புகள் மற்றும் அந்தப் பணிகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாகப் பணம் வரவு வைக்கப்பட்டால், அதைத் திருப்பி அனுப்புவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில், இதையே பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக தொகையை மோசடியாகப் பறிக்கும் புதிய உத்தி குறித்து பாரத ஸ்டேட் வங்கி (SBI) எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ஜம்ப்டு டெபாசிட்’ (Jumped Deposit) எனப்படும் இந்த மோசடியில், வங்கிக் கணக்கில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி மர்ம நபர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்கின்றனர். […]
எப்போதும் மிகவும் நம்பிக்கையுடனும், சாமர்த்தியமாகவும் பேசும் ஒரு ஆண், தனக்குப் பிடித்தமான ஒரு பெண் அருகில் வரும்போது திடீரென பேச திணறுவதையோ அல்லது வார்த்தைகளை தேடுவதையோ பார்த்திருக்கிறீர்களா? அவர் சாதாரணமான உரையாடலின் போதே அளவுக்கு அதிகமாக சிந்திப்பது, தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்வது அல்லது தான் மற்றவர்களின் பார்வைக்கு எப்படி தெரிகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்துவது போன்ற மாற்றங்களை வெளிப்படுத்துவார். இது சாதாரண நரம்புத் தளர்ச்சி அல்லது பதற்றம் […]
மறைந்த நடிகர் நானா படேகரை விமர்சிக்கும் வகையில் மீண்டும் சர்ச்சைக்குரிய பதிவை விஷால் பட நடிகை தனுஸ்ரீ தத்தா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, Evil Death என பதிவிட்டது பெரும் விவாதமான நிலையில், தற்போது நானா படேகர் நரகத்தில் எரிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 18 ஆண்டுகள் என் வாழ்க்கையை நரகமாக்கினார். அவரின் ஆன்மா கொடிய வலியாலும் சித்ரவதையாலும் வதைக்கப்படட்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார். பாலிவுட்டின் மூத்த நடிகரான […]
நாட்டின் தலைநகர் டெல்லியில் பல தசாப்தங்களாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கான முக்கிய மையமாக விளங்கிவந்த ‘ஜந்தர் மந்தர்’ பகுதி, இனி அதிகாரப்பூர்வ போராட்ட களமாகச் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் பகுதிக்கான போராட்ட அனுமதிகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு மாற்றாக 3 புதிய மாற்று இடங்கள் போராட்டக் களங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11, […]
இந்தூர் ஹோல்கர் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை 209 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் […]
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை “அரசியல் களமாக மாற்ற முடியாது” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) விவகாரத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன […]
தட்டம்மை நோய் என்றாலே அதன் கடுமையான பாதிப்புகள் குறித்து பொது சுகாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், தட்டம்மை தொற்றால் ஏற்படும் மற்றொரு கடுமையான மற்றும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து முன்னணி காது கேளாமை மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தட்டம்மை பாதிப்பிலிருந்து மீண்டாலும், சிலருக்கு காது கேளாமை அல்லது நிரந்தரமாக கேட்கும் திறன் குறையும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பென் […]
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, குஜராத்தின் சூரத் நகரத்தைச் சேர்ந்த பைக் பிரியர்கள் துர்க்கை அம்மனுக்குத் தங்களது பக்தியைச் செலுத்தும் வகையில் ஒரு புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தபாரி கடற்கரையில் (Dabhari Beach) 71 உயர்வகை பைக்குகளைக் கொண்டு, துர்க்கை அம்மனின் பிரம்மாண்ட உருவப் படத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர். பாரம்பரியப் பொருட்களைப் பயன்படுத்தாமல், தங்களின் அன்றாட விருப்பமான பைக்குகளைக் கொண்டே இந்த பிரம்மாண்ட வடிவத்தைக் கொண்டு வந்துள்ளனர். திறந்தவெளி மணற்பரப்பில் 71 […]

