fbpx

உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாது என்று மத்திய அரசு தனது முடிவை தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போர் தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் படித்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் நாடு திரும்பினர். கிட்டத்தட்ட 20,000 மாணவர்கள் உக்ரைனில் இருந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் …

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை, தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு தேர்வை வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் நடத்த நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளிகளில் இந்த …

சென்னை விமான நிலைய வளாகத்தில் வேன் ஓட்டுனர் தன் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்பும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுந்திர ராஜன் (38) . இவர் சென்னை விமான நிலைய வளாகத்தில் சரக்கத்தில் , தனியார் சரக்கு நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தனியாகத்தான் சென்னை …

உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் இருக்கும் பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, பெற்றோர், உடல்நல குறைவால் அவதிப்பட்ட தனது நான்கு வயது குழந்தையை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதை தொடர்ந்து, வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு போகும்படி கூறி அனுப்பினர். அந்த வார்டில் மக்கள் கூட்டம் அதிக …

“ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம்” என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள மருதம் பல்பொருள் அங்காடி மற்றும் மேலாண்மை பயிற்சி வகுப்புகளை …

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கன்டெய்னர் லாரி மோதி அக்காள் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்வர் தண்டபாணி. இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இருவரும் ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். மூத்த மகள் ஜெயஸ்ரீ 11ம் வகுப்பும் இளையமகள் வர்ஷா ஆறாம் வகுப்பும் படித்து …

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தின் சகோதரிகள் இரண்டு பேரின் உடல்கள் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தன. சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரெஹ்மான், ஹரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகிய ஐந்து பேரை காவல் …

சேலம் மாநகர போக்குவரத்து காவலரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் படுகாயம் அடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

சேலம் மாநகர போக்குவரத்து காவலராக பாண்டியன் (42) என்பவர் பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இளைஞர் ஒருவர் செல்போனில் …

ரஷ்ய அதிபர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும், அதிலிருந்து அவர் தப்பி பிழைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யூரோ வீக்லி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. எவ்வாறாயினும், இந்த முயற்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.. புடினின் காரின் முன் சக்கரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், புகை வெளியேறியதால், அதிபரின் …

மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள …