சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் உரிய வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் செல்லமுடியும். உரிய அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் NALSAR (National Academy of Legal Studies and Research) எனப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில், BCI (Bar Council of India) தலையிட்டதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. NALSAR என்றால் என்ன? NALSAR என்பது ஹைதராபாத்தில் […]
பாக்கெட் உணவுப் பொருட்களில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருந்தால், அதுகுறித்த எச்சரிக்கை தகவலை பேக்கெட்டின் முன்பக்கத்தில் குறிப்பிடுவது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI-க்கு உச்சநீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாக்கெட் உணவுகளில் உள்ள சர்க்கரை, […]
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக, தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகங்களை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முதற்கட்டமாக, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை அலுவலக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக சுமார் ரூ.5 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய […]
கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளிச் சீருடையில் இருந்த இரு மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீருடை அணிந்த நிலையில் மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது. இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர […]
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்ஸிக்’. இந்த படத்தை இயக்குனர் கீதூ மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திரைப்படம் தணிக்கைக் […]
சென்னையில் தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இன்று சற்றே நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூ.14,220க்கும் ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் தங்கத்தின் விலை மிக குறைந்ததுள்ளது. இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் […]
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மும்பையில் உள்ள ‘பார்லே அக்ரோ’ (Parle Agro) நிறுவனத்தின் கிடங்கில் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள காலாவதியான Frooti மற்றும் Appy Fizz பானங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பை செம்பூர் பகுதியில் உள்ள பிரயாக் நகரில் அமைந்த பார்லே அக்ரோ நிறுவனத்தின் கிடங்கில் கடந்த ஆகஸ்ட் 13 மாலை 6 மணிக்கு […]
உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த நீர்மின் திட்ட சுரங்கத்தில் திடீரென தண்ணீர் மற்றும் மண் குவியல்கள் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிபால்கோட்டி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (THDC) நிறுவனத்தின் நீர்மின் திட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் […]

