மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் ‘பி.எம். கிசான்’ (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 6,000 ரூபாய் நிதியுதவியின் அடுத்த தவணையை எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் இத்திட்டத்தில், 23-வது தவணை நிதி கடந்த ஜூன் 20 அன்று விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, 24-வது தவணை நிதி […]

எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் மறுத்துள்ளது. அந்தப் பகுதி ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்நாட்டின் உயர் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் பசீஜ் படைப்பிரிவுத் தலைவர் ஹுசைன் தாயேப் பேசுகையில், “இன்று ஹார்முஸ் ஜலசந்தி இஸ்லாமிய குடியரசான ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. […]

அன்றாட சமையலை வேகமாக முடிக்க உதவும் சாதனங்களில் பிரஷர் குக்கருக்கு முக்கிய இடம் உண்டு. சில நிமிடங்களில் உணவை சமைத்துவிடலாம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், அவசரத்தில் குக்கரை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்தில் இயங்குவதால், சிறிய கவனக்குறைவுகூட விபத்துக்கு வழிவகுக்கும். அதனால், குக்கரை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் சில அடிப்படை விஷயங்களை கவனிப்பது […]

மார்பகப் புற்றுநோய் என்றாலே மார்பகங்களில் தோன்றும் கட்டிகள் அல்லது தோற்ற மாற்றங்கள் மட்டுமே அறிகுறிகள் என பெரும்பாலோர் கருதி வரும் நிலையில், தொடர்ச்சியான முதுகுவலியும் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்த 27 வயது இளம்பெண் ஒருவரின் மருத்துவப் பின்னணி பலரையும் உறைய வைத்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணை […]

தாய்லாந்து புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் கஞ்சா பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளன. டாடா குழுமத்திற்குச் சொந்தமான இந்த இரண்டு விமான நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட விமானிகள் பணிபுரிகின்றனர். விமானப் போக்குவரத்துத் துறை விதிகளின்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் […]

வரும் சர்வதேச விளையாட்டு அட்டவணையை முன்னிட்டு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, முதன்முறையாக நடைபெறவுள்ள ‘பிஃபா ஆசியான் கோப்பை’ (FIFA ASEAN Cup) கால்பந்து தொடரிலிருந்து இந்திய ஆண்கள் அணி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை உலக சாம்பியனான சக்திவாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புரீதியான போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளதால், இந்த விலகல் […]

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்தப்பட்ட கட்டடத்துக்கு, இந்தாண்டு ரூ.28,000 சொத்து வரி வந்துள்ளதால் பாதிக்கப்பட்ட கட்டிட்ட உரிமையாளர் ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போல பலருக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட சொத்து வரியை விட கூடுதலாக […]

ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவர்களின் ஓய்வுக்கால தேவையைப் பூர்த்தி செய்ய வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) மட்டுமே போதுமானதா என்பது குறித்த முக்கிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் இ.பி.எஃப் நிதி, கூட்டு வட்டி அடிப்படையில் பல ஆண்டுகள் வளர்ந்து பெரிய தொகையாக மாறினாலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும்போது அது மட்டுமே முழுமையான பாதுகாப்பைத் தராது என நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இத்தீர்மானத்தின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழக பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை […]

தமிழக முதலமைச்சர் விஜய்க்காக புதிய அலுவலகம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மற்ற […]