தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பலமாக மோதி சிக்கிக் கொண்டது. ​ஆனால், காரின் மோதிய சத்தத்தையோ? பின்னால் கார் சிக்கி இருந்ததையோ? லாரி ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் லாரியைத் தொடர்ந்து இயக்கிச் சென்று உள்ளார். இதனால் விபத்துக்கு […]

சென்னையில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தலையில் சுமத்தப்பட்ட பேரிடி என்று கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாக நடைமுறையில் இருக்கும் வரியின் மதிப்பீட்டிலிருந்து 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் வரை உயர்த்துவது என்பது வழக்கமானதுதான். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் திடீரென ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற ரீதியில் பெருமளவில் […]

கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையை ஆளும் த.வெ.க. அரசு மூடிமறைக்க பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். தம்பி அமுதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த சீமான், கல்விக்கூடங்களில் நிலவும் பகைமையும், போதைப்பழக்கமும் […]

மகாராஷ்டிர மாநிலம் ஜள்காவ் மாவட்டம் வறன்காவ் பகுதியில், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறிச் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தாத்தா வயதுடைய 4 முதியவர்களை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அணுகிய இந்த 4 முதியவர்களும், இனிப்புகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதுரியமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்குச் சென்று சிறுமியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் […]

மழைக்காலம் அல்லது குளிர்ச்சியான நாட்களில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் பலரையும் அவதிப்படுத்தும். இதற்காக உடனடியாக மருந்துகளை நாடுவதற்கு முன்பு, வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை வைத்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பானங்களைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் வெங்காயம் மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் சிரப்பும் ஒன்று. இந்த சிரப்பை தயாரிப்பது மிகவும் எளிது. தேவையான அளவு வெங்காயத்தை நறுக்கி, அதனுடன் தேன் சேர்த்து சிறிது நேரம் […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. விபத்தின் போது பலத்த சத்தத்துடன் மருந்துகள் வெடித்துச் சிதறியதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் சம்பவ […]

திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்கு வந்த கூரியர் பார்சல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்சலைத் திறந்தபோது பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இருந்த நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தப் பார்சலின் பின்னணியில் அவரது மனைவிக்கும் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடை செய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட […]

திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகாரில், 2025 டிசம்பர் 14ம் தேதி மலப்பம்பாடியில் திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த மாநாடு நடைபெற்ற 124 ஏக்கர் நிலம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு […]

சமூக வலைதளங்களில் ஒருவரின் தனிப்பட்ட பழக்கங்கள் குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அதற்கான தீர்வு வன்முறையாக மாறக்கூடாது. ஆனால், சென்னை அம்பத்தூரில் மனைவியின் சமூக வலைதளப் பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து பெண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கீழே தள்ளப்பட்டதாக போலீஸாருக்கு […]

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை ஷகீலா, தற்போது உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தியதும், தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் இருந்ததுமே தனது உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஷகீலா, தனது யூடியூப் சேனல் மூலம் உடல்நிலை குறித்த தகவல்களை […]