பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோருக்கு, மத்திய அரசு வழங்கி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ (Sukanya Samriddhi Yojana) ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. குறிப்பாக மகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதிச் சிக்கலின்றி திட்டமிட விரும்புவோருக்கு, சந்தையில் உள்ள மற்ற சேமிப்புகளை விட இது அதிக லாபகரமானதாக உள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் : 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தை பிறந்தது முதல் […]

சிவன் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள், கருவறைக்கு நேராக அமர்ந்திருக்கும் நந்தியின் காதுகளில் ஏதோ ஒரு ரகசியத்தை பகிர்வது போல குனிந்து பேசிவிட்டு செல்வதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். காலம் காலமாக தலைமுறை கடந்து தொடரும் இந்த ஆன்மீகப் பழக்கத்தின் பின்னால் ஆழமான நம்பிக்கைகளும், தத்துவார்த்தமான காரணங்களும் பொதிந்துள்ளன. நந்தி தேவர், சிவபெருமானின் வாகனமாக மட்டுமல்லாமல், கைலாயத்தின் முதன்மை காவலராகவும் போற்றப்படுகிறார். ஒரு நாட்டின் அரசரை சந்திக்க செல்லும் முன் வாயிற்காவலரிடம் […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]

வாஸ்து சாஸ்திரம், கட்டுமானம், திசைகள் பஞ்சபூதங்களின் சமநிலை… எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் வருவதாக நம்பப்படுகிறது. இது அமைதி, செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பை மேம்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தை நம்புபவர்கள், அதன்படி தங்கள் வீட்டைக் கட்டுகிறார்கள், மேலும் பொருட்களையும் அதற்கேற்ப வைக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரம் துடைப்பத்தை வைப்பது குறித்தும் பல விஷயங்களைக் கூறுகிறது. துடைப்பத்தை வீட்டில் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கிரகப் பெயர்ச்சிகள் சில ராசிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அழகு, ஆடம்பரம் மற்றும் நிதி செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன், ஜனவரி 12 முதல் மார்ச் இறுதி வரை மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார். இந்த ‘சுக்கிரப் பெயர்ச்சி’ காரணமாக, சில ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும், மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் நிறைந்த காலத்தையும் அனுபவிப்பார்கள். சுக்கிரப் பெயர்ச்சியின் முக்கியத்துவமும் தாக்கமும் வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் […]

வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தொடர் வன்முறை தாக்குதல் நடந்து வரும் நிலையில், 50 வயதுடைய ஹிந்து வணிகர் கோகன் தாஸ் (Khokon Das) தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டதில் ஏற்பட்ட தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கடந்த இரண்டு வாரங்களில் நடந்த 4-வது கொலை சம்பவமாகும். மருத்துவமனையில் உயிரிழப்பு கோகன் தாஸ், டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை […]

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இணைக்காதவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித்துறை பான் எண்ணை வழங்குகிறது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் […]

குளிர்காலம் நெருங்கும் போது, ​​வானிலை மாற்றங்களால் நமது உடல் குளிர்ச்சியடைவது இயல்பு. பலரும் தங்கள் கைகளையும் கால்களையும் வெந்நீரில் நனைப்பதன் மூலமோ அல்லது கம்பளி ஆடைகளை அணிவதன் மூலமோ குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். இருப்பினும், நீங்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், கதகதப்பான காலநிலையிலும் உங்கள் கைகளும் கால்களும் தொடர்ந்து குளிர்ச்சியாகவே இருக்கிறதா? அப்படியானால், இது வெறும் குளிரின் விளைவாக மட்டும் இருக்காது. இது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவு […]

அமெரிக்கா வெனிசுலா மீது ஒரு விரிவான இராணுவத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாகவும், அதன் விளைவாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும், மதுரோவும் அவரது மனைவியும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]