தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று நடப்பு ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைக்க உள்ளார். மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் […]

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 30.04.2025 தேதியிட்ட அதன் முடிவின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். 1990 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் விதி 6-ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் /அட்டவணைகளை மத்திய அரசு சட்டப் பிரிவு 8-இன் துணைப்பிரிவு (1)-ன் கீழ் அதிகாரப்பூர்வ அரசிதழ் மூலம் அறிவிக்கிறது. தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் […]

கார்த்திகை பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். இந்தப் புனித நாளில் சிவபெருமான், பெருமாள், முருகன், அம்பிகை, குலதெய்வம் மற்றும் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபடப் பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் கார்த்திகை பௌர்ணமியில் நாம் செய்யும் வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மங்கள காரியங்கள் அனைத்தும் பல மடங்கு பலனை திருப்பிக் கொடுக்கக் கூடிய […]

வாடிக்கையாளர் சேவைகளில் வட்டார மொழிகளை சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையில் வட்டார மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகள் (PSBs) இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என நிதிச் சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து வங்கிகளும் கணக்கு திறக்கும் படிவங்கள், பணம் செலுத்தும் சீட்டுகள், பாஸ் புத்தகங்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களையும் […]

தீபம் என்பது மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்கும் மங்களப் பொருட்களில் ஒன்றாகும். சிவபெருமானை வேண்டி அன்னை பார்வதி தேவி தவம் இருந்து, அவரது உடலில் பாதியாக இடம்பிடித்த நாள் என்பதால், கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றி வழிபடுவது சிவசக்தி அருளைப் பெறுவதற்கான அற்புதமான வழியாகச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் இறைவனை ஒளி வடிவமாக வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பையும் நன்மைகளையும் பெற முடியும் என்பது ஐதீகம். கார்த்திகையின் ஆன்மீக […]

கொச்சியில் இருந்து நேற்று சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக உரிமை மீட்புக்குழுவைத் தொடங்கி நிர்வாகிகளை நியமித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தரப்பு ஒத்துழைக்காததாலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது சந்திக்க இயலாத காரணத்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த […]

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு […]

நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 […]

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை திருக்கார்த்திகை தீபத் திருநாளாக நாம் கொண்டாடுவது வழக்கம். சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்த தினம் தான் திருக்கார்திக்கை தினமாகும்.. அந்த வகையில் இந்த ஆண்டின் கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது.. இன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னர் தான் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.. திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருவண்ணாமலை […]