இந்தியாவில் நிபா வைரஸ் பரவல் ஒருவித அச்ச அலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அறிக்கை வெளியான பிறகு, ஆசியாவில் உள்ள பல நாடுகள் விமான நிலையங்களில் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தாய்லாந்து, நேபாளம் மற்றும் தைவான் போன்ற நாடுகள், பயணிகளைக் கண்காணிப்பது மற்றும் தீவிரக் கண்காணிப்பு உள்ளிட்ட கோவிட் கால பாணிப் பரிசோதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளன. கோவிட் காலத்தில் எவ்வாறு பரிசோதனைகள் செய்யப்பட்டதோ, அதேபோன்று தற்போதும் மீண்டும் அத்தகைய […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎஃப் கணக்குதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கத் தயாராக உள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கான வருடாந்திர வட்டித் தொகையை பிஎஃப் கணக்குகளில் வரவு வைக்க உள்ளது. கணக்கில் உள்ள தொகையைப் பொறுத்து, சிலருக்கு ரூ. 40 ஆயிரம் வரை கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது முற்றிலும் வட்டி வடிவில் வரும் ஒரு தொகையாகும். EPFO இந்த நிதியாண்டிற்கு 8.25 சதவீத […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]

குளிர்காலத்தில் சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குளிர்ந்த காற்று மூளையில் உள்ள நரம்புகளைச் சுருங்கச் செய்கிறது. இது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணம். அதிக நேரம் குளிரில் இருப்பது வலியை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் காற்று வறண்டு காணப்படும். இதனால், இந்த காலகட்டத்தில் மக்கள் குறைவாகத் தண்ணீர் குடிக்கிறார்கள். இது நீர்ச்சத்து குறைபாடு, மூளை மற்றும் நரம்புகளில் அழுத்தம் அதிகரித்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. இது தலைவலியை […]

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே மிகப் பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.. இதனால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களில் கிட்டத்தட்ட 97 சதவீதத்திற்கு விதிக்கப்படும் சுங்க வரிகளை குறைக்கவோ அல்லது முற்றிலும் நீக்கவோ முடியும். இதனால், விவசாயம், கார் உற்பத்தி போன்ற பல துறைகளில் உள்ள பொருட்கள் இந்தியர்களுக்கு எதிர்காலத்தில் மலிவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டம் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) பெயரில் போலியான கடன் ஒப்புதல் கடிதம் ஒன்று சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.. அந்த கடிதத்தில் 7 லட்சம் ரூபாய் கடன் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், பணத்தைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் 860 ரூபாய் “ஒப்பந்தக் கட்டணமாக” செலுத்த வேண்டும் என்று […]

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.. இது இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்றும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வு அமெரிக்காவை கலக்கமடையச் செய்ததாகத் தெரிகிறது. […]

கமல் அரசியலில் உலகநாயகனாக மாறுவார் என நினைத்தால் நகைச்சுவை நாயகனாகிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசியிருந்தார்.. மேலும் ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என டிவியை உடைத்த உலகநாயகன் கடைசியில்  இந்த நிலையில் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும், கவிஞருமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சினேகன் “ எந்த கேட்டகரியில் செல்லூர் ராஜுவை சேர்ப்பது என தெரியவில்லை.. எப்போதுமே அரசியல் […]

சென்னை விமான நிலையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பொஅட்டது.. தீ விபத்தால் ஏற்பட புகை சர்வதேச விமானங்கள் புறப்படும் பகுதியை சூழந்ததால் பரபரப்பு நிலவியது.. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. […]

சமீபத்தில், ஒரு ஷார்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பனி சூழ்ந்த அண்டார்டிகா பகுதியில், ஒரு சிறிய பென்குயின்தனது கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக நடந்து செல்கிறது. கடலை நோக்கிச் சென்றிருக்க வேண்டிய அந்தப் பெங்குயின், அதற்கு நேர் எதிர் திசையில் உள்ள பனிப்பாறைகளை நோக்கி நடந்து சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தக் காட்சி மிகவும் மெதுவாக இருக்கிறது. அதில் எந்த அவசரமும் இல்லை. அந்தப் பென்குயின்திரும்பிப் பார்க்கவில்லை. அது […]