திருமணத்துக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில், மணமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இளைஞரின் தந்தையே முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஜிம் நடத்தி வந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. மெஹந்தி உள்ளிட்ட சடங்குகளும் முடிந்த நிலையில், திருமண ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வீட்டில் எந்தப் பொருளை எங்கு வைக்க வேண்டும் என்பதில் வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், வீட்டில் மாட்டப்படும் புகைப்படங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதாக வாஸ்து நம்பிக்கைகள் கூறுகின்றன. குறிப்பிட்ட சில வகை படங்களை வீட்டில் வைப்பது எதிர்மறையான சூழலை உருவாக்கும் என இந்த நம்பிக்கைகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில், வீட்டின் சுவர்களில் போர் அல்லது சண்டைக் காட்சிகள் இடம்பெறும் புகைப்படங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என வாஸ்து […]
தினமும் சூடான டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியானால், அதை தயாரித்த உடனேயே அவசரமாக குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. டீ அல்லது காபி குடிப்பதால் நேரடியாக புற்றுநோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. ஆனால், பானத்தை எந்த அளவு சூடாக குடிக்கிறோம் என்பது முக்கியம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மிகவும் சூடான பானங்களை தொடர்ந்து அருந்துவது உணவுக்குழாயின் உள் சவ்வில் வெப்பத்தால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற தொடர்ச்சியான […]
2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அதிபர் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் […]
சீனாவின் கிழக்குக் கரைப் பகுதியில் அமைந்துள்ள குயிங்டாவோ (Qingdao) துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில், பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சரக்குக் கப்பலில் வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். லைபீரியா நாட்டுக் கொடியுடன் கூடிய ‘ஓஷன் மெலடி’ (Ocean Melody) என்ற சரக்குக் கப்பல், ‘சீனா ஸ்டேட் ஷிப்பில்டிங் கார்பரேஷன்’ நிறுவனத்தின் பழுதுபார்க்கும் தளத்தில் பராமரிப்புப் […]
அசாம் மாநிலம் நுமாலிகர் பகுதியில், காட்டு யானை ஒன்றின் கழுத்தில் மிகப்பெரிய டிராக்டர் டயர் மாட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த யானையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர். வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே வனத்துறையினரும், வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமும் (CWRC) இணைந்து உடனடியாகச் செயல்பட்டனர். யானையின் கழுத்தில் இருந்த டிராக்டர் […]
ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நீண்ட நேரம் தலையைக் குனிந்தபடி வைத்திருப்பது, கழுத்து வலி மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளை மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மனித தலையின் இயல்பான எடை 5 கிலோகிராம் மட்டுமே என்றாலும், மொபைல் திரையைப் பார்க்கும்போது கழுத்தை முன்னோக்கி வளைப்பதால் கழுத்தெலும்பு மீதான உயிரியக்கவியல் அழுத்தம் சுமார் 27 கிலோகிராம் வரை உயர்கிறது. இதனால் இயல்பாக இருக்க வேண்டிய […]
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026-ன் முதல் அரையிறுதிப் போட்டியில், வங்கதேச அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 64 ரன்கள் […]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வில்லிஸ்டன் நீர்த்தேக்கத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அடர்ந்த மரங்கள் சூழ்ந்த விநோத தீவு ஒன்று, செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து திடீரென மாயமாகி தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 9,800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, தோராயமாக ஒன்றரை அமெரிக்கக் கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இணையானதாகும். கடந்த ஜூலை மாத இறுதியில் படகோட்டிகளால் எடுக்கப்பட்ட […]
நெற்றியைத் துளையிடுவது போன்ற தாங்க முடியாத வலியுடன் இருண்ட அறையில் முடங்க வைக்கும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால், உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் (100 கோடிக்கும் அதிகமானோர்) பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் மைக்ரேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. நரம்பியல் மற்றும் மரபியல் ரீதியாக மூளையில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்புற காரணிகளால் தூண்டப்படும்போது, குறிப்பிட்ட […]

