நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக பிரச்சனைகள், மூட்டு வலி அல்லது செரிமான பிரச்சனைகளை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது எந்தளவு உண்மை? விரிவாக பார்க்கலாம். நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு பொதுவான கட்டுக்கதை உள்ளது. இது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் சிலர் கூறுகிறார்கள், ஆனால் இது உண்மையா? தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால் சில நேரங்களில் […]

80 மற்றும் 90-களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர், நடிகர் மட்டுமின்றி திரைப்பட இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நிலையில், தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். இவருக்கு, சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் இவருடைய கடைசியாக ஆசையாக இருந்தது. ராஜசேகர் இறப்பதற்கு சில […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தக் லைஃப்”. இப்படத்திற்கு ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் வரும் “முத்த மழை” என்ற பாடலை தமிழில் “தீ” பாடியுள்ளார். ஆனால், “தக் லைஃப்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடகி தீயால் பெர்ஃபார்மன்ஸ் செய்ய முடியாததால், அவருக்கு […]

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உதவி பொறியாளர் (அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்கள்: […]

அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவில் முதலமைச்சராக்கப்பட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்கு சென்றதும் அவரையும் கட்சியின் துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினரையும் கட்சியை விட்டே ஒதுக்கினார். பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு பொதுக்குழு மூலம் நீக்கி, […]

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, அவர் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த […]

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேடையில் முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் இடம்பெற்று இருந்தனர். அமைச்சர்கள் பலரும் […]

நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய – மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 2 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் […]

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். மேக்ஸ்வெல் 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது 13 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 போட்டிகளில் விளையாடி, 3990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 126 என்ற ஸ்ட்ரைக் ரேட் உடன் இருக்கும் மேக்ஸ்வெல், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் […]