வருமான வரி ITR தாக்கல் செய்வது தொடர்பாக இந்தாண்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அனைத்து ஆவணங்களும், விவரங்களும் சோதனை செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, ரூ.1 லட்சத்திற்கும் மேல் வீட்டு வாடகை இருந்தால், நீங்கள் தரக்கூடிய பான் கார்டை வைத்து சோதனை செய்வார்கள். நீங்கள் சொல்லும் வாடகைக்கு கணக்கு சரியாக உள்ளதா என சோதனை நடத்தப்படும். நீங்கள் கணக்கு காட்டும் முதலீடுகள் உண்மையானதா என்று முறையாக ஆய்வு […]

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வரவில்லை. இப்போது உக்ரைன் ரஷ்ய இராணுவ தளங்களை குறிவைத்துள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டு உக்ரைன் இராணுவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் இந்தத் தாக்குதலை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கியதாக ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யாவின் விமானப்படை தளத்தை உக்ரைன் தாக்கியது. […]

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதனால், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும். மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு […]

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனின் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23 அன்று 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 09.06.2025 முதல் 11.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் […]

வடக்கு சிக்கிமில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் தொடர் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் பாலங்கள் சேதமடைந்து மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடுமையான மழைப்பொழிவு காரணமாக வடக்கு சிக்கிமில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமாக்கியுள்ளது, இதனால் 1,200 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மங்கன் மாவட்டத்தில் அமைந்துள்ள லாச்சென் மற்றும் லாச்சுங்கின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர். கனமழையால் […]

நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்துவிட்டார் என எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்துவிட்டார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. தேமுதிகவுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. மதுரையில் […]

கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3 முதல் 7-ம் தேதி வரை […]