சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய விலை விவரங்கள் : இந்த விலை குறைப்பு சென்னை மட்டுமல்லாமல், டெல்லி, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் பதிவு விவரங்கள் : வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் […]
Rasi Palan | You will get relief from chronic health problems.. How will today be for 12 zodiac signs..?
திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார் . இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர். சின்னாளப்பட்டி […]
சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பினை உடனுக்குடன் கண்டறியும் வகையில் இணைய வழியில் உள் தணிக்கை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; பதிவுத்துறையால் ஆவணப்பதிவு உள்ளிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சேவைகளும் முழுமையாக கணினி மூலம் இணைய வழி பயன்பாட்டிற்கு கொண்டு வர STAR 2.0 Module. 13.02.2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. […]
கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; வரும் தேர்தலில் கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். அதனை உறுதி செய்துள்ளது இங்கு கூடியுள்ள கூட்டம். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெறும். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர், ஓட்டு வாங்கும்போது உங்களை அணுகினார். ராஜினாமா செய்ய உங்களை சந்தித்தாரா…? கடந்த 26, 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இங்கு […]
புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. ஆக இருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த […]
யுஜிசி விதியின்படி மாணவர்கள் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: நாட்டில் உள்ள சில உயர்கல்வி நிறுவனங்கள், உரிய காலக்கட்டத்துக்குள் பருவத் தேர்வுகளை நடத்துவதில்லை.பட்டப் படிப்பு சான்றிதழ்களையும் வழங்கவில்லை என்றும் யுஜிசியின் கவனத்துக்கு […]
எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.மின் கட்டண […]
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. […]

