உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ (Norovirus) என்ற மற்றொரு வைரஸ் பாதிப்பு சத்தமே இல்லாமல் வேகமாகப் பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீப வாரங்களாக இந்த வைரஸ் பாதிப்பு விகிதம் கணிசமாக உயர்ந்து, அந்நாட்டில் ஒரு புதிய சுகாதார சவாலை உருவாக்கியுள்ளது. இது பொதுமக்களிடையே இயல்பாகவே அச்சத்தை அதிகரித்துள்ளது. நோரோவைரஸ் என்றால் என்ன..? நோரோவைரஸ் என்பது இரைப்பைக் குடல் அழற்சியை […]

நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவின் வருடாந்திர கந்தூரி விழா தொடங்குவதையொட்டி, அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கந்தூரி விழாவைக் கருத்தில் கொண்டு, வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விழாவிற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் நாகூரில் கூடுவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக, ரயில்வே […]

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘டிட்வா’ (Titwa) புயல் வலுவிழக்கும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இன்று இரவு நேரத்தில் புயல் சென்னைக்கு மிக அருகில் வரும்போது, அது மேலும் வலு குறைந்து வெறும் தாழ்வு மண்டலமாக மட்டுமே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழையும் பலத்த காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. இதன் விளைவாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். புயலின் தாக்கம் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததுடன் பலத்த […]

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள சி.ஆர்.காலனியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சுதந்திரகுமார் (43) சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைப் பூர்வீகமாக கொண்ட சுதந்திரகுமார், திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விடுப்பு எடுத்து கழுகுமலையில் உள்ள பெற்றோரின் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் இருந்து 500 […]