“பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என நில வளத்துறை தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான், ‘பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1999இல் “The Future […]
நியூயார்க் நகரம் உட்பட அமெரிக்காவில் ஒரு புதிய, மிகவும் தொற்றும் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய NB.1.81 மாறுபாடு அமெரிக்காவில் கண்டறியப்படுவதற்கு முன்பு சீனாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தது. இந்தப் புதிய மாறுபாடு முதன்முதலில் அமெரிக்காவில் மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலம், வர்ஜீனியா மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள விமான […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2025 – ம் ஆண்டு மே 19 அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் […]
புதுச்சேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துறை : புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பதவியின் பெயர் : Village Administrative Officer (கிராம நிர்வாக அலுவலர்) வகை : அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 41 பணியிடம் : புதுச்சேரி கல்வித் தகுதி […]
இரு சக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, அதற்கான எதிர்கால திட்டங்களை வகுத்து வருகின்றனர். அரசும் அதற்கேற்றாற் போல எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரிசலுகைகளையும் அறிவித்து வருகிறது. தற்போது கணிசமான அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் நமது சாலைகளில் பயன்பாட்டில் வந்துள்ளன. அதே போல, […]
பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி அவர்களது வாரிசுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையில், https://eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சிட்டாவில் உள்ள […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் […]
Aspergillus: உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பது ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சைக்கு வழிவகுக்கும், இது ஆண்டுதோறும் பல இறப்புகளை ஏற்படுத்தும், பெரிய பகுதிகளை பாதிக்கிறது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பல வகையான ஆஸ்பெர்கிலஸ் உலகில் பரவி மக்கள், செல்லப்பிராணிகள் மற்றும் தாவரங்களை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், தி லான்செட் மற்றும் சிஎன்என்-ன் கூற்றுப்படி, இந்த ஆய்வு தற்போது சர்வதேச நிபுணர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது […]
சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2025. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் […]