தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலையில் இருந்து 31.03.2025-ம் தேதியோ அல்லது அதற்கு முன்ன்னதாகவோ பணியிலிருந்து ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வமான திருமணத் துணைவர் ஏற்கனவே கோரப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகளுக்கும் கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் சலுகைகளைப் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட ஆறு மாத தகுதிவாய்ந்த […]
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]
திருமணமான பெண் அரசுப் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த […]
சேலம் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் ஜவுளி வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட […]
நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிகத் தீவிரமாக உள்ளது. மே 29 அன்று காலை மேற்கு வங்கம் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வங்கம் – வங்கதேசம் கடற்கரை […]
நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு […]
பேருந்து கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு விவகாரத்தில் மக்களிடம் கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்து விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பேருந்துக் கட்டண உயர்வு குறித்து உயர் […]
புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டின்படி, இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் புகைக்கின்றனர். 13 முதல் 15 வயது வரையிலான […]
வடக்கு நைஜீரியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக பெயத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 117 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் தலைநகரான அபுஜாவிலிருந்து மேற்கே 180 மைல்கள் (300 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள நைஜர் மாநிலத்தில் உள்ள மோக்வா நகரில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. வடக்கு நைஜீரியாவில் […]

