தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே 820 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

கரூர் மாவட்டத்தில், தாயின் உடல்நலக் குறைவை சரிசெய்யப் பரிகாரம் செய்வதாகக் கூறி ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணின் தாயாருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் சக்திவேல் என்ற சாமியாரை அணுகியுள்ளார். அப்போது அந்த சாமியார், “தாயின் உடல்நலப் பாதிப்பு தீர சில முக்கிய பரிகாரங்கள் செய்ய வேண்டும், […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு எல்லையில் வசித்து வந்த யசோதா என்ற திருமணமான பெண், தனது கள்ளக்காதலன் மற்றொரு தோழியுடன் உறவு வைத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யசோதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த உறவு தொடர்ந்த நிலையில், […]

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாம் ஜார்ஜ் (59). இவருக்கும் இவரது மனைவி ஜெசி சாம் (49) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஜெசியின் சடலம் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாம் ஜார்ஜை போலீசார் கைது செய்து விசாரித்ததில், மனைவியைக் கொலை செய்து உடலை வீசிய உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில், […]