fbpx

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த திங்கள் முதல் புதன் வரையிலான 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் நேற்றும் இன்றும் பங்குச் …


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. …

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEG திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ ,மானியத்தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி …

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் …

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை …

துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான ஆதரவு விலை திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் …

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் …

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு …

தமிழ்நாடு அரசு எஸ்‌.சி. மற்றும்‌ எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல்‌ அம்பேத்கர்‌ வெல்லும்‌ தொழில்‌ முனைவோர்‌ பிசினஸ்‌ சாம்பியன்ஸ்‌ திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில்‌ சட்டமன்றத்தில்‌ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஆர்வமுள்ள எஸ்‌.சி. மற்றும்‌எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்‌ தொடங்கவிருக்கும்‌, உற்பத்தி, வணிகம்‌ மற்றும்‌ சேவை சார்ந்த நேரடி …

இந்தியாவில் 2023 ஏப்ரல் மாதத்தில் முந்தையை 2022 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் படி, உரம், எஃகு, சிமெண்ட், நிலக்கரி ஆகிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய …