அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் நாளை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]

வரும் ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்; பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தும் முறையாக சென்றடைகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறந்த நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் […]

ஜூலை 15-ம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் […]

RSS – BJP மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு நீட் ஊழல் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவது நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பல குளறுபடிகள் நடந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த […]

சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார். இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை […]

பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி முருக பக்தர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட வீடியோ துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள அதிமுக ஐடி விங் இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்! பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை! அவலமே உருவான ஒரு ஆட்சியை […]

ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி.. * வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளராக ஷிபா பிரபாக சதீஷ் நியமனம். * CMDA உறுப்பினர் செயலாளராக பிரகாஷ் நியமனம். * நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம். […]

குமரியில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எஸ் பி வேலுமணியை எடப்பாடி பழனிச்சாமி நீக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் […]

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் […]