பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி முருக பக்தர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட வீடியோ துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள அதிமுக ஐடி விங் இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்! பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை! அவலமே உருவான ஒரு ஆட்சியை […]

ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி.. * வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளராக ஷிபா பிரபாக சதீஷ் நியமனம். * CMDA உறுப்பினர் செயலாளராக பிரகாஷ் நியமனம். * நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம். […]

குமரியில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எஸ் பி வேலுமணியை எடப்பாடி பழனிச்சாமி நீக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் […]

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் […]

சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை செய்ததாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘ரோஜாக்கூட்டம்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் […]

நடிகர் விஜய் முருகர் மாநாட்டில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டிருந்திருப்பார், அதனால்தான் வீட்டுக்கு வந்த ரசிகர்களை அவர் பார்க்கவில்லை என கோவை வைஷ்ணவி விமர்சித்துள்ளார். நடிகர் விஜயின் 51-வது பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் பார்ப்பதற்காக நீலாங்கரை இல்லத்திற்கு திரண்ட ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் முடிந்தனர். வீட்டுக்குள்ளேயே இருந்த விஜய், வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஒரு நிமிடமும் நேரில் சந்திக்கவில்லை என்பது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து பைக்கில் […]

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்களிலும் QR குறியீடு அடிப்படையிலான பில்லிங் முறை சமீபத்தில் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நகரப்பகுதிகளில் குறைந்தது 40% மற்றும் கிராமப்பகுதிகளில் 25% மதுபான விற்பனை டிஜிட்டல் கட்டண முறைகளில் நடைபெற வேண்டுமென மாநில சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC) ஊழியர்களுக்கு உத்தரவு விடுத்துள்ளது. வருவாய் இழப்பைத் தடுப்பது, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கட்டணம் வசூலிப்பது மற்றும் வெளிப்படைத்தன்மையைப் […]

தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்துவருகிறது. இதனால் பலர் வீடு கட்டும் நோக்கத்தில் வீட்டு மனையை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், பழைய வீட்டு மனை வாங்க விரும்பும் நபர்கள் சில முக்கியமான விசயங்களில் உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என […]

மத்திய பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களுக்கான 13-வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். மத்திய பணியாளர் தேர்வாணையம் “காலி பணியிடங்கள் 2025”-க்கான 13-வது கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை 02.06.2025-ம் தேதி வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகள், அமைப்புகளால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை வெளிப்படையான முறையில் […]