தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட, தூய்மை பணியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை கண்டு களித்து வருகின்றனர் அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை பெருநகர […]
சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறிய 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையின் கொளத்தூர் பகுதியில், தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி தவறி விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விபத்தின் எதிரொலியாக சென்னை காவல்துறை […]
இந்தியாவிலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சன் டிவி குழுமம் திகழ்கிறது. 1993-ம் ஆண்டு முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ரூ.24,000 கோடி மதிப்பு கொண்ட மிகப்பெரிய மீடியா குழுமமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சன் டிவியின் அதிபரான கலாநிதி மாறனுக்கும் அவரின் சகோதரரும் எம்.பியுமான தயாநிதி மாறனுக்கு இருக்கும் மனக்கசப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கலாநிதி மாறன் மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை வாங்கிவிட்டதாக […]
சிவகங்கை மாவட்டத்தின் மறவமங்கலம் அருகேயுள்ள பொத்தகுடி கிராமம், இன்று தமிழகம் முழுக்க மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது. காரணம்.. சிட்டுக்குருவியை காக்கும் கிராமமக்களின் தீர்மானம். பொத்தகுடி கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு 6க்கும் அதிகமான தெருக்கள் உள்ளது. எல்லா ஊர்களையும் போல இந்த தெருக்களில் இருக்கும் தெருவிளக்கிற்கு, ஊரின் இறுதியில் ஒரு மெயின் பாக்ஸ் உள்ளது. இங்கு குருவி ஒன்று கூடு […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு […]
The Madras High Court has ordered an interim stay on the Enforcement Directorate from taking further action against film producer Akash Bhaskaran.
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. 62 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. முன்னதாக […]
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை […]