வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. […]

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர், அவருடைய கணவனால் இன்று அதிகாலை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையானவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்றும், கொலையைச் செய்தவர் அவரது கணவர் பாலமுருகன் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக பாலமுருகனிடமிருந்து பிரிந்து வந்த ஸ்ரீபிரியா, […]

சேலம் மாவட்டம் தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற ஓட்டுநர், வீட்டுக்கு பூப்பறிக்க வந்த பட்டியலிட சமூகத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு தினேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தினேஷ்குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுமியின் தலையை துண்டித்து கொலை […]

தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய 1,996 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 2.36 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினர். நேற்று (நவம்பர் 29) வெளியான தேர்வு முடிவுகள், தமிழகக் கல்வித் தரம் குறித்துக் கவலையளிக்கும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளன. தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் சேரும் நபர்களுக்குத் […]

நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவின் வருடாந்திர கந்தூரி விழா தொடங்குவதையொட்டி, அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கந்தூரி விழாவைக் கருத்தில் கொண்டு, வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விழாவிற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் நாகூரில் கூடுவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக, ரயில்வே […]