முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில், மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 209 பெண் காவலர்கள் தங்களது குழந்தைகளை நலமாக கவனிக்கும்படி தாங்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான மாற்றம் 03.06.2025க்குள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட அறிவிப்புகளை […]

கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் […]

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மூன்று நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்துள்ளார். துணை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சபாநாயகர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இன்று ஜிப்மர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை” என்ற நிகழ்வில் பங்கேற்ற பிறகு, துணை ஜனாதிபதி இங்குள்ள மத்திய நிர்வாக ஜிப்மரில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் […]

மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சிசிஆர்டி) ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த பயிற்சி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், கலைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் […]

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 10 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,383 ஆகக் குறைந்துள்ளது. ஒரு நாள் முன்பு இந்த எண்ணிக்கை 7,400 ஆக இருந்தது. இந்த காலகட்டத்தில், 17 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவிட் நோயால் இறந்த 10 பேரில் 3 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், […]

பாமக நிறுவனர் ராமதாஸிடம், கட்சியின் தலைவர் அன்புமணி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், இருவரிடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தலைமை பண்பு கிடையாது, கூட்டணி குறித்து முடிவு […]

நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் […]

கள் மீதான தடையை நீக்க கோரி போராட்டத்தை அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தடைகளை மீறி பனைமரம் ஏறினார். நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் […]

பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் […]

நீட் தேர்வில் 680 மதிப்பெண் எடுத்த கோயம்புத்தூர் மாணவி அபிஷியாவுக்கு குறைவான பர்சன்டேஜ் வழங்கப்பட்டது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும், நீட் தேர்வு கட்டாயம் என்பதில் மத்திய அரசு தீவிரமான நிலைப்பாடு கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு போராடி வருகிறது. இந்த […]