தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில், மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலு நாச்சியார் என பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் மேம்பாலம் பெயர் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருப்பரங்குன்ற விவகாரத்தை வைத்து பாஜக மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.. மேலும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டி இருந்தார்.. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக சார்பில் இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு […]
ஒவ்வொரு படத்திற்காகவும் தனது தோற்றத்தை மாற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்களில் நடிகர் மாதவன் முக்கியமானவர். இவர் சமீபத்தில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்திற்காக அதிகரித்த உடல் எடையை, அதிவேகமாக, எந்தவொரு தீவிரப் பயிற்சியோ அல்லது உணவுப் பிற்சேர்க்கைகளோ (Supplements) இல்லாமல் குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். ‘ராக்கெட்ரி’ திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்த மாதவன், படப்பிடிப்பு முடிந்தவுடன் (2022-இல்) எடையைக் குறைக்கும் தேவை ஏற்பட்டது. இதுபற்றிப் பேசிய […]
திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 4-ம் தேதி மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.. […]
தென்காசி மாவட்டம் ஊர்மேழகியான் கிராமத்தை சேர்ந்தவரும், செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞருமான முத்துக்குமாரசாமி (46), பகல் நேரத்தில் தனது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். போலீஸ் விசாரணையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்தச் […]
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, மீண்டும் தங்கள் தாய் கழகமான அ.தி.மு.க-வில் இணைந்து வருவது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில், அ.ம.மு.க-வில் முக்கியப் பொறுப்பு வகித்த மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர். சுரேஷ் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக-வின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அவர் மீண்டும் கட்சியில் இணைந்தார். […]
The price of gold in Chennai today increased by Rs. 320 per sovereign, reaching Rs. 96,320.
தென்காசியை சேர்ந்த கண்ணன் (25) என்பவரும், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) என்பவரும் சொரிக்காம்பட்டி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்தான நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையே, கண்ணனுக்கும் கலாசூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கலாசூர்யாவின் குழந்தை சிவானி தனக்குத் […]
நீலகிரியை சேர்ந்தவர் பிரவீன் (22). இவர், கோவையில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், ஊட்டியில் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் 15 சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதற்கிடையே, இருவருக்கும் மத்தியில் அடிக்கடி சண்டைகள் வரத் தொடங்கின. இதனால், இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் பிரவீனுக்கு, ஊட்டியில் படித்து வரும் கல்லூரி […]
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]

