சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 […]

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், […]

சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும். மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. கைப்பகுதி முழங்கை அளவுக்கு […]

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கலந்தாய்வுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் […]

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி வலுவாக இணைந்து செயல்பட்டு வருகிறது. பின்னர், அதிமுக – தவெக கூட்டணி அமையப் போவதாக […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்திருப்பதாக கூறினார். இது கர்நாடக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றம் […]

உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். * உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைஃபாய்டு, மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான மருத்துவ சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். * எந்த […]

பாமக சார்பில் பொதுக்குழுவை கூட்டுவதற்காக புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தில் இருக்கிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று ராமதாஸை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, ராமதாஸின் கொள்கையை கையில் […]

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,302ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 4 பேரும், டெல்லி, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என […]

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விளாத்தி ஊரைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிகாமணிக்கு துபாயில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த கோவையை சேர்ந்த சாரதா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, சாரதாவிடம் சிகாமணி ரூ.6 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சாரதாவை சிகாமணி […]