அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவில் முதலமைச்சராக்கப்பட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்கு சென்றதும் அவரையும் கட்சியின் துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினரையும் கட்சியை விட்டே ஒதுக்கினார். பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு பொதுக்குழு மூலம் நீக்கி, […]

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, அவர் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த […]

நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய – மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 2 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் […]

“தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதவை என்பதால், மாணவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இந்த வகையான […]

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை ரூ.1,000 உதவித் தொகை பெறாத தகுதியுள்ள பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பலர் புதிய ரேஷன் கார்டு பெற்றிருந்தாலும், சிலர் முன்பு விண்ணப்பித்தும், தகுதியுடன் இருந்தும் ரூ.1,000 பெற முடியாமல் இருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4ஆம் தேதி […]

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் […]

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : Bharat Electronics Ltd (BEL) வகை : மத்திய அரசு மொத்த பணியிடங்கள் : 20 பணியின் பெயர் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு), சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) கல்வித் தகுதி : * இன்ஜினியர் […]

பொதுவாக, அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பது வங்கியின் விதிமுறைகள் ஆகும். அப்படி, பராமரிக்காத பட்சத்தில் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் வங்கியை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி, கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் […]

தமிழ்நாட்டில் ஒருவழியாக கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புகின்றனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கிட்டத்தட்ட 45 நாட்களாக மாணவர்கள் இந்த கோடை விடுமுறையை கொண்டாடி வந்தனர். மேலும் இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் அதிகளவில் கூட்டம் கூடியது. இந்த சூழலில் தான், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் […]