ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார். தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடித்தது. பாமக தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவி, மகள் வழி பேரன் முகுந்தனுக்கு கொடுத்தார் ராமதாஸ். ஆனால், இதற்கு […]

வருமான வரி ITR தாக்கல் செய்வது தொடர்பாக இந்தாண்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அனைத்து ஆவணங்களும், விவரங்களும் சோதனை செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, ரூ.1 லட்சத்திற்கும் மேல் வீட்டு வாடகை இருந்தால், நீங்கள் தரக்கூடிய பான் கார்டை வைத்து சோதனை செய்வார்கள். நீங்கள் சொல்லும் வாடகைக்கு கணக்கு சரியாக உள்ளதா என சோதனை நடத்தப்படும். நீங்கள் கணக்கு காட்டும் முதலீடுகள் உண்மையானதா என்று முறையாக ஆய்வு […]

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனின் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23 அன்று 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி […]

கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3 முதல் 7-ம் தேதி வரை […]

முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி […]

கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு முதல் நாளான இன்றே பாட புத்தகம் வழங்கப்பட உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி […]

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி […]

தூய்மை பாரதம் 2.0 திட்டத்தின் கீழ் 36.28 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொதுக் கழிப்பிடத்தில் சுமார் 1 வருடங்களுக்கு மேலாக தங்கி வரும் வடமாநில இளைஞர்கள்.. சென்னை திருவேற்காடு நகராட்சி வீரராகவபுரம் காடுவெட்டி பகுதியில் தூய்மை பாரதம் இயக்கம் 2.0 என்ற திட்டத்தின் சார்பில் 2021-2022 ஆண்டின் கீழ் பொது கழிப்பிடம் 36.28 லட்சம் மதிப்பீட்டில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பொது கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் […]

திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். மதுரை உத்தங்குடியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் முக்கிய பொதுக்குழு என்பதால், மாநிலம் முழுவதிலுள்ள அனைத்து அணி நிர்வாகிகளும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் […]