தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞான சேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். மாணவி பாலியல் […]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்ய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியான சம்பவம் மக்கள் மத்தியில் […]

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வில்சன் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் மாநிலங்களவைக்கு செல்கின்றனர். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் […]

செங்கம் சுங்கச்சாவடிக்கு பணம் செலுத்தாத அரசுப் பேருந்து, ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், பயணி ஒருவர் தாமாக முன்வந்து டோல் கட்டணத்தை செலுத்தி பேருந்தை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சொந்த பணத்தை கட்டு பயணி ஒருவர் அந்த பேருந்தை மீட்டு பயணத்தை தொடர உதவினார். இதற்கிடையில், சுங்கச்சவாடி (Tollgate) ஊழியர்கள் மற்றும் பயணிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, […]

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், மே 31, ஜூன் 1 ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால், சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் […]

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த […]

தொழிலதிபர்களின் மனைவியுடன் பழகி, உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் ஆபாச புகைப்படங்களை காட்டி நகை, பணம் பறித்து குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். ஆனால், இவர் தொழில் காரணமாக சென்னையில் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால், வாரந்தோறும் கோவைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். […]

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் […]

சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2025. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் […]

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in என்ற முகவரியில் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவுக்கான […]