மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது “ உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் உடனே ஓ.கே சொல்லிவிடுவேன்.. இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல.. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையான பராமரிபின்றி இயங்கி வந்த காற்றாஅலை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக் கூடிய சாலையில் சீல நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவத்தின் காற்றாலை இயந்திரம் ஒன்று உள்ளது. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த காற்றாலை இயந்திரம் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக அடியோடு சாய்ந்தது. காற்றாலை உடைந்து 6 துண்டுகளாக சிதறியதால் அருகே […]
நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. […]
In Chennai today, the price of gold fell by Rs. 480 per sovereign and is being sold at Rs. 72,400.
சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1980ல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அருணா. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் […]
பாமகவில் கடந்த சில நாட்களாக உள் கட்சி மோதல் நிலவி வரும் சூழலில் அன்புமணிக்கு எதிராக சகோதரி ஸ்ரீ காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் […]
நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும், பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 […]
With a nationwide strike scheduled to take place today, let’s see if schools and banks will be closed? Will buses run in Tamil Nadu?
பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் தேர் திருவிழாவின் போது அலங்கார பகுதி சாய்ந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னை அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லையம்மாள் கோவில் உள்ளது. இங்கு காலம் காலமாக ஆணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி வெகு விமர்சையாக திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அபிஷேகம் […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் […]