தமிழக வெற்றிக்கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்றும், […]

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோவில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே முழு பொறுப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. 5000 பேருக்கு மேலும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், […]

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.. இதனால் அந்த மாலின் 3 மாடிகளிலும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.. தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிதறி ஓடினர்.. மாலில் 10 மணிக்கு பிறகு தான் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.. எனினும் 8 மணிக்கே […]

சொத்து தொடர்பான உரிமைகள் மற்றும் பரிமாற்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் பொதுமக்களுக்கு இருந்த சிரமங்களை போக்கும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை ஒரு புதிய ஆன்லைன் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் வில்லங்கச் சான்றிதழ் போலவே, ஒரு சொத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் வகையில், ‘பட்டா வரலாறு’ (Patta History) என்ற இந்தச் சேவை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது. முன்பெல்லாம் சொத்துக்குப் […]

சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்! சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]