தமிழகத்தில் இன்று பலத்த தரைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின்ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் 2-3 டிகிரி செல்சியஸ் […]

20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு […]

2025-26-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைனில் https://tnmedicalselection.net என்ற இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் இன்று அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள புனித திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்கள் வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். […]

மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் […]

சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் […]

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை மாநகர கவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சேலம் நரசோதிபட்டியில் உள்ள கார்த்தி நகரைச் சேர்ந்த ஆர். மோகன்ராஜ் (43), ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், அவரது நிறுவன அதிகாரிகள், மோகன்ராஜ் மீது, நிறுவனத்தின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஷெவாப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். வெள்ளிக்கிழமை போலீசார் அவரைக் கைது செய்து, அவரது மொபைல் போனைப் […]

மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மிக பயணம் ஜூலை 18-ம் தேதி தொடக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான அம்மன் கோவில்களுக்கு அரசே உங்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களை ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம், ஜூலை […]