சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை […]
சொத்து விவகாரத்தில் கலாநிதி உள்ளிட்டோருகு நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாநிதி, தற்போது டிவி சேனல்கள் கைசென்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ச் அணி உரிமத்தை ரத்து செய்ய கோர போவதாக கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன். திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரரும் ஊடக அதிபருமான கலாநிதி மாறனுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த […]
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21 முதல் 25-ம் […]
தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மூலம் இந்த நியமனங்களை மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான காரணம் என்னவென்றால், அரசு பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, 10 […]
வீடு, மனைகளை விற்பனை செய்யும் புரோமோட்டர்கள் ரியல் எஸ்டேட் அனைத்தும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதை காட்சிபடுத்தும் வகையில் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016, குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களின் வாங்குபவர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையைக் […]
2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]
தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான […]
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) அன்று சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]
தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் மாநகராட்சியைப் பொறுத்தவரை 677, நகராட்சியில் 455 என மொத்தம் 1,132 இடங்களில் காலனி மற்றும் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அப்பெயரை நீக்கி, பூக்கள், மரங்கள், இயற்கை, […]