With reports that Annamalai is once again being given an important position in the BJP, the question has arisen as to how the AIADMK is going to deal with this.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக ADGP ஹெச்.எம். ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ADGP ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டார். […]
துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜீன் 2025 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க […]
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். ஓரிரு இடங்களில் 22-ம் […]
நிலம் மற்றும் மனை விவகாரங்களில் துல்லியமான தகவல் மற்றும் நேர்மையான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன், தமிழ்நாடு பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவுகளை ஆன்லைன் மயமாக்கி, இடைத்தரகர் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் பணியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கீகாரமற்ற மனைகள் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளமான www.tnlayoutreg.in தற்காலிகமாக செயலிழந்தது. இந்த தளத்தின் செயல்திறன் குறைபாடுகள் காரணமாக, […]
ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்; அலுவலகங்கள் / பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற / பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பணிக்காலத்திற்கு அகத்தணிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓய்வு பெற்ற சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள்/தலைமை […]
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் […]
மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், ரூ.1194 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு […]
திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் நீதியன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர். இந்தியாவில் சுயமரியாதை திருமணங்களை முதலில் அங்கீகரித்தது தமிழ்நாடு தான் என பெருமிதத்தோடு கூறினார். மேலும் […]